ஒவ்வொரு நாடும் தங்கள் விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாமல் இருக்க “உயிர் பாதுகாப்பு விதிகள்” (Biosecurity rules) வைத்திருக்கிறது.. வெளிநாட்டிலிருந்து வரும் பூச்சிகள், நோய்கள், களைகள் தங்கள் நாட்டில் பரவாமல் தடுப்பதே இதன் நோக்கம். பல நாடுகள் பூக்கள், இலைகள், சில உணவுப் பொருட்கள் ஆகியவற்றிற்கு தடை அல்லது கடுமையான விதிகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா: மல்லிகை போன்ற புதிய பூக்கள், இலைகளை எளிதாக கொண்டுவர முடியாது. அனுமதி சான்றிதழ் (Phytosanitary Certificate) + பூச்சி அழிப்பு சிகிச்சை இருந்தால் மட்டுமே அனுமதி.
நியூசிலாந்து: ஆஸ்திரேலியாவைப் போலவே, நியூசிலாந்தும் அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்க கடுமையான உயிர் பாதுகாப்பு விதிகளையும், புதிய பூக்களை இறக்குமதி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் (EU): ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் சில பூக்களுக்கு முழுமையான தடை. அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தால் “பூச்சி சான்றிதழ்” கட்டாயம்.
அமெரிக்கா: எல்லையில் சுங்க அதிகாரிகள் ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்கிறார்கள். பூச்சி/நோய் இல்லையா என்று பார்த்து தான் அனுமதிக்கிறார்கள். கூடவே, குழந்தைகள் விரும்பும் கிண்டர் ஜாய் சாக்லேட் கூட அமெரிக்காவில் தடை.
நேபாளம்: காதலர் தினம் போன்ற நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் ரோஜா பூக்களை தற்காலிகமாக தடை செய்கிறது. காரணம், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்.
ரஷ்யா & சீனா: சில வகை பன்றி இறைச்சிக்கு தடை.
ஜப்பான் & EU: பச்சை நிறத்திலான ஒரு நிறுவனத்தின் குளிர்பானம், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எந்த நாட்டிற்குப் போனாலும், அந்த நாட்டின் இறக்குமதி தடைப்பட்ட பட்டியலை முன்பே தெரிந்து கொள்வது அவசியம். இல்லையெனில் உங்கள் பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
Read more: கூட்டுறவு சங்கங்களில் 481 உதவியாளர் பணியிடங்கள்…! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…!