மகிழ்ச்சி..! தகுதி உள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை…! அமைச்சர் தகவல்…!

Gemini Generated Image 1org9g1org9g1org 1

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.


விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; உங்களோடு ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அதிகமாக மகளிர் உரிமைத் தொகை குறித்த மனுக்கள் வருகின்றன. இதை சென்னைக்கு அனுப்பிவைக்கிறோம். முதல்வரைப் பொருத்தவரை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த அரசைவிட வேறு யாரும் நல்ல அரசை நடத்த முடியாது. திட்டங்கள் பெயர் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான திட்டங்கள் உள்ளன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து குழு அமைக்கப்பட்டு, நிதி துறையில் உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தல் நேரத்தில் நாங்கள் கூறியது உண்மை. அரசிடம் தற்போது நிதி இல்லை. ஏற்கனவே இருந்த அரசு ஆட்சியில் இருந்தபோது நிதி இல்லாமல் செய்துவிட்டனர். தற்போது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். ஏற்கனவே உள்ள வட்டி சுமையையும் கட்டியாக வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தான். அரசு ஊழியர்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை. இதற்காக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அக்குழுவில் அரசு ஊழியர் சங்கத்தினரும் உள்ளார்கள். அவர்களுடன் கலந்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்களுக்கு மேலானோர் இணைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி முகவர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வாரு வீட்டுக்கும் சென்று மக்களை இத்திட்டத்தில் இணைக்கும்போது, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்.

மத்திய அரசு நமது மொழி, இனத்தை அழிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து மக்களை ஒன்றிணைக்கும் எண்ணத்தோடு ஓரணியில் தமிழ்நாடு என்று மக்களை இணைத்து வருகிறார் முதல்வர். நாளை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் பொதுமக்களோடு இணைந்து நடத்த உள்ளோம். மண், மொழி, இனம் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறி மக்களோடு இணைந்து உறுதிமொழி ஏற்க உள்ளோம் என்றார்.

Vignesh

Next Post

ஸ்மார்ட்போன் சார்ஜர்கள் எப்போதும் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?. இத்தனை விஷயம் இருக்கா?.

Mon Sep 15 , 2025
இன்று, ஸ்மார்ட்போன் சார்ஜர் அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒரு கேஜெட்டாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களின் சார்ஜர்களும் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் வருவதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். மிகச் சில பிராண்டுகள் மட்டுமே கருப்பு நிறத்தில் சார்ஜர்களை வெளியிடுகின்றன. சார்ஜரின் நிறம் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பின்னால் உள்ள காரணம் மிகவும் சுவாரஸ்யமானது, மேலும் 99% மக்களுக்கு அதன் உண்மையான ரகசியம் […]
smart phone charger white

You May Like