fbpx

ஆ.ராசா 2 ஜி ஊழல் வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்கள் இன்று தாக்கல்…! அக்டோபர் 31-ம் தேதி விசாரணை…!

2ஜி வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு ஏற்பட்டதால், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ‌ கடந்த 2018-ம் ஆண்டில் வழக்கில் விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பு வாதம் கடந்த 2020 ஜனவரி 15-ல் நிறைவடைந்தது. எதிர்தரப்பினரின் வாதம் 2020 பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. எனவே வழக்கில் தினசரி விசாரணை நடத்த வேண்டும். வேண்டுமென சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு தினசரி அடிப்படையில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிபிஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ தரப்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் மேல்முறையீடு மனுவை ஏற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தனத்தை தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ் குமார் சர்மா, மேல்முறையீடு அனுமதி மனுக்கள் தொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை, எதிர்மனுதாரர்கள் சார்பில் எழுத்துபூர்வமான வாதங்களை 10 பக்கங்களுக்கு மிகாமல் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளி வைத்த உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கில் எழுத்த பூர்வமான வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!… அதிக வெற்றி!… 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தல்!

Mon Oct 30 , 2023
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிக வெற்றிபெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. […]

You May Like