தேசிய கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை கால அவகாசம்…!

School Money 2025

தேசிய கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 2025 ஜூன் 2, முதல், விண்ணப்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு கல்வி உதவித் தொகை திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்த முழு விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs என்ற இணையப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தொடக்கக் கல்விக்கு பிறகு இடைநிற்றலை தவிர்ப்பதற்காக தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மூலம் இந்த தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

Vignesh

Next Post

உஷார்!. மொபைல் கதிர்வீச்சு வெறும் 30 நாட்களில் மூளை செல்களை கொல்லும் அபாயம்?. உண்மை என்ன?.

Thu Sep 18 , 2025
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வைரலாகின்றன, அவற்றில் பல தவறாக வழிநடத்தப்படுகின்றன. சமீபத்தில், மொபைல் போன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு மூளை செல்களை சேதப்படுத்தும் என்றும் அவை வெறும் 30 நாட்களில் நுண்ணோக்கியில் தெரியும் அளவுக்கு சேதப்படுத்தும் என்று கூறும் ஒரு கூற்று வைரலாகி வருகிறது. இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். செல்போன் கதிர்வீச்சு மூளை செல்களை வெறும் 30 நாட்களில் மிகவும் […]
Mobile radiation brain

You May Like