நவீன செல்ஃபோன் யுகத்தில் காதல் என்றால் டைம் பாஸ் போல என நினைத்து இளைஞர்களும் இளம்பெண்களும் விழுந்து அதில் மீள முடியாமல் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டு கர்ப்பமான பின் கழற்றி விடும் போக்கு இளைஞர்களிடம் அதிகரிப்பது கவலையை ஏற்படுத்துகிறது.
இதனால் பாதிக்கப்படுவது இருவரும் தான்.. அப்படி காதலில் விழுந்து கர்ப்பமாகி காதலனால் ஏமாற்றப்பட்ட ஒரு சம்பவம் தான் விழுப்புரத்தில் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஐடிஐ படித்துவிட்டு டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் செஞ்சு பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
விக்னேஷ் அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரை காண விக்னேஷ் அடிக்கடி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கர்ப்பமான அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷிடம் கூறியுள்ளார்.
இளம் பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்த விக்னேஷ் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதன் பின்னர் அவரிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை அதிரடியாக கைது செய்தனர்.
Read more: ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் உங்க PF Balance-ஐ ஈஸியா தெரிந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா..?