மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. மேலும் டபுள் போனஸாக, ஜூலை மாதத்தில் இருந்து 3% உயர்வை கணக்கிட்டு அக்டோபர் சம்பளத்தில் 3 மாத நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பலன் மாறுபடும். உதாரணமாக, ஓய்வூதியர் ஒருவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 என்றால், 55% DA-வில் ரூ.4,950 கிடைக்கும். மொத்த ஓய்வூதியம் ரூ.13,950 ஆகும். ஆனால் 58% ஆக உயர்ந்தால், ரூ.5,220 ஆகி மொத்தம் ரூ.14,220 ஆகும். அதாவது மாதந்தோறும் ரூ.270 அதிகரிக்கும். எனவே இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் தீபாவளி செலவுக்கு பிரச்னை இருக்காது.
கடந்த ஆண்டு பணியாளர்கள் மற்றும் உற்பத்தித்திறன் போனஸ் திட்டத்தில் சேர்க்கப்படாத பிற ஊழியர்களுக்கு, 2024 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் அல்லாத போனஸாக 30 நாள் ஊதியம் வழங்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் போன்றோர் இதன் மூலம் பயனடைந்தனர். அதேபோல இந்த ஆண்டும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.