முக்கிய அறிவிப்பு…! திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்.. நாளை எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம்…!

MK Stalin dmk 1

திமுக தலைவர் மு.க.ஸ்ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கத்தில் நடைபெறும்.

அதுபோது, திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.கடைசியாக, கடந்த ஜூலை 18-ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்னர் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு இப்போது எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பிரச்சாரத்தை மேற்கொள்வது., அரசாங்கத் திட்டங்களை எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஓரணியில் தமிழ்நாடு மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை எந்த அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது என்பதைப் பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்..!! இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Mon Sep 22 , 2025
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ரேஷன் அட்டையின் வகையை மாற்றிக்கொள்ள முடியும். பொதுவாக, தமிழ்நாடு அரசு அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டைகள் (PHH), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் (NPHH), சர்க்கரை ரேஷன் கார்டு மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டை என பல வகைகளில் அட்டைகளை வழங்குகிறது. உங்கள் தற்போதைய ரேஷன் அட்டை, உங்களின் தற்போதைய பொருளாதார நிலைக்கு பொருந்தவில்லை என்றால், அதை […]
ration 2025

You May Like