விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு…!

karur TVK 2025

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு.‌ கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுகுணா உயிரிழப்பு


கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்‌.

இதில் 9 குழந்தைகள், 17 பெண்கள், 14 ஆண்கள் என 40 பேர் நேற்று வரை உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அனைவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்த நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில் கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுகுணா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

முக்கிய அறிவிப்பு..! மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான MBA படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்...!

Mon Sep 29 , 2025
மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 […]
college admission 2025

You May Like