ஜவுளித் துறைக்கான பிஎல்ஐ திட்டம் புதிய விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 2025, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையினரின் பெருமளவிலான, உற்சாகமான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, ஜவுளித் துறைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2025, டிசம்பர் 31 வரை திறந்திருக்கும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முன்மொழிவுகளை https://pli.texmin.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.விண்ணப்ப சாளரத்தை மீண்டும் திறப்பது, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான தொழில்துறை ஆர்வத்தின் நேரடி பிரதிபலிப்பாகும். இது அதிகரிக்கும் சந்தை தேவை மற்றும் உள்நாட்டு ஜவுளி உற்பத்தி மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.