“அதிமுக கூட்டத்தில் தவெக தொண்டர்கள்..” இபிஎஸ் சொன்ன விஷயம்.. இத கவனிச்சீங்களா..?

44120714 saamy33

மேட்டூர் பகுதியில் நீர் நிலைகளை பார்வையிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “திமுக ஆட்சி 53 மாதமாக இருக்கும் போதிலும், 100 ஏரி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை. 59 ஏரிகள் மட்டுமே நீர் நிரம்பியுள்ளது. எஞ்சிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளன.


மேட்டூர் அணை நிரம்பி உபரி தண்ணீர் கடலில் கலக்கும் நிலை உள்ளது. அந்த உபரி நீரை விவசாயப் பயன்பாட்டிற்கு மாற்றும் நோக்கத்தில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி ‘அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டம்’ என்பதற்காகவே அதை ஆமை வேகத்தில் நடத்தி வருகிறது. முழுமையாக நூறு ஏரிகள் நிரம்ப வாய்ப்பு குறைவு,” என்றார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நூறு ஏரிகளும் நிரப்பப்படும் என உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி, “அத்திக்கடவு-அவிநாசி திட்டமும் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு தேவையான நீர், உதவிகள் அனைத்தையும் வழங்கிய அரசு அதிமுக அரசே,” எனவும் கூறினார்.

தனது தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் குறித்து பேசும்போது, “தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் எங்கெல்லாம் சென்றாலும் ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். சிலர் வேண்டுமென்றே அதிமுக மீது விமர்சனம் செய்கிறார்கள். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து எங்களை பற்றியே பேசுகிறார்கள். எங்கள் கூட்டணியில் அவர்களுக்கு என்ன கஷ்டம்?” என்று கேள்வி எழுப்பினார்.

Read more: விரைவில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு லட்சுமி யோகம்.. தங்க மழை தான்..!!

English Summary

“The AIADMK workers were at the meeting..” EPS said.. Did you notice this..?

Next Post

உடலுறவு முடிந்ததும் பிறப்புறுப்பை மதுவால் சுத்தம் செய்தால் கர்ப்பம் உண்டாகாது..!! ஓட்டுநரால் 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!

Sun Oct 12 , 2025
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ஆணுறை இல்லாமல் உறவு கொண்டு, தவறான மருத்துவ ஆலோசனையால் கருக்கலைப்பின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், தொழில் நிமித்தமாக ஃபரிதாபாத்திற்கு வந்துள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் அனில் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை […]
Sex 2025 2

You May Like