ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. 2026-ல் 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு.. தமிழக அரசு அனுமதி!

trb teachers recruitment board e1764485547423

2026-ம் ஆண்டில் 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது..

மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது..


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் கடந்த உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது.. அதன்படி ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்தது.. எனினும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் ஆசிரியர் பணியை தொடரலாம் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஓய்வு பெறும் வயது இருந்தால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.. இல்லையெனில் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது..

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழ்நாட்டில் சுமார் 1.5 லட்சம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. அப்போது ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.. ஆசிரியர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் பொருட்டு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆசியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.. ஆண்டுக்கு 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுவதால் பணிபுரிந்து வரும் பயன்பெறுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read More : Breaking : கரூர் வழக்கில் புது ட்விஸ்ட்.. ஒரு நபர் ஆணைய விசாரணை நிறுத்தி வைப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு!

English Summary

The Tamil Nadu government has granted permission to conduct the Special Teacher Eligibility Test 3 times in 2026.

RUPA

Next Post

அலைகள் இசை பாடும் தரங்கம்பாடி கடற்கரை.. 700 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிநாதர் கோயில்..! இத்தனை சிறப்புகளா..?

Tue Oct 14 , 2025
Tharangambadi Beach where the waves sing their music.. The 700-year-old Masilamanathar Temple..! Do you know where it is..?
temple 2

You May Like