சிறப்பு டெட் தேர்வு… மாவட்டந்தோறும் இணைய வழியில் சிறப்பு பயிற்சி வகுப்பு..! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

TET 2025

அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்கள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகளவிலான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழலில் உள்ளனர். பதவி உயர்வுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, 4 மாதங்களுக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு டெட் நடத்தினால் பாதிப்பில் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

அதனுடன் ஆசிரியர்களுக்கு தகுதிவாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு வாரஇறுதி நாள்களில் பணியிடை பயிற்சி வழங்கலாம். எனவே, இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி தனி டெட் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆணையிட வேண்டுமென கூறியுள்ளனர்.இந்த கருத்துருகளை பரிசீலனை செய்து அதையேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026-ம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் கூடுதலாக சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுதவிர 2026-ம் ஆண்டில் நடைபெறும் டெட் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மீதமுள்ள தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027-ம் ஆண்டில் தேவைக்கேற்ப டெட் நடத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு டெட் தேர்வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு எஸ்சிஇஆர்டி பயிற்றுநர்களை கொண்டு மாவட்டந்தோறும் இணைய வழியில் சிறப்பு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த ஒரு கோயிலுக்கு சென்றால் 1000 சிவாலயங்களை வழிபட்ட பலன் உங்களுக்கு கிடைக்கும்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

Tue Oct 14 , 2025
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளால் தனித்து நிற்கிறது. சைவத் திருமுறைகளில் போற்றப்படும் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200-வது தலமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 10-வது இடத்தையும் இது வகிக்கிறது. சங்க காலத்தில் ‘திருக்கானப்பேர்’ என்று புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட இந்தப் பழம்பெரும் ஊர், சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சிவபெருமானின் காளை வாகனம் வழி காட்டியதால் ‘காளையார்கோவில்’ எனப் பெயர் […]
Sivan 2025

You May Like