Alert: தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை…! சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை…!

cyclone rain 2025

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

தமிழகத்தில் இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 20-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆஹா!. இந்தியாவில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்!. எங்கு தெரியுமா?

Thu Oct 16 , 2025
இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2030 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 24வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு இந்தப் போட்டிகளை நடத்தும் உரிமையை வழங்க வாரியம் பரிந்துரைத்துள்ளது. இப்போது, ​​1930 ஆம் ஆண்டு தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழா அகமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. வாரியத்தின் […]
commonwealth games 2030

You May Like