உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திர பிரதேசம் மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த சீதாப்பூர் என்ற ஊரில் வசித்து வருபவர்கள் மோதிலால் சௌஹான் மற்றும் ரஜினி தம்பதி. இந்த தம்பதியினருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கூலி தொழிலாளியான மோதிலால் அருகிலுள்ள ஊரில் கொத்தனாராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு தனது மனைவியின் மீது தீராத சந்தேகம் இருந்து வந்திருக்கிறது. தனது மனைவியை மற்றவர்களுடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் சண்டை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மோதிலால் வீட்டிலிருந்த மண்வெட்டி எடுத்து மனைவியை கடுமையாக தாக்கியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து வந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மோதிலால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.