மகளிர் உரிமைத் தொகை லிஸ்ட் ரெடி.. வரப்போகும் குஷியான அறிவிப்பு..!! செக் பண்ணுங்க மக்களே..

magalir

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது. அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். 

குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நவம்பர் 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்த சில நாட்களில் முதல் கட்ட பயனாளிகளின் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகுதியான நபர்களுக்கு விரைவில் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அளிக்கப்படும். அவர்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read more: விமான நிலையம் இல்லை, சொந்த நாணயம் இல்லை, 40,000 மக்கள் தொகை; ஆனால் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று.. இந்த நாடு எது?

English Summary

Women’s rights list is ready.. Exciting announcement coming soon..!! Check it out people..

Next Post

இந்த ராசிக்காரர்களை கண்ணை மூடிக்கொண்டு காதலிக்கலாம்! சிறந்த காதலர்களாம்! நீங்க எந்த ராசி?

Fri Oct 24 , 2025
ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் காதலைப் பொறுத்தவரை இயல்பாகவே முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் அன்பைக் கொடுப்பது மட்டுமல்லாமல், தங்கள் துணையின் உணர்வுகளை மதிக்கிறார்கள், காதலில் சமநிலையையும் விசுவாசத்தையும் பராமரிக்கிறார்கள். அவர்கள் அன்பின் உண்மையான அர்த்தத்தை வாழ்கிறார்கள் என்று கூறலாம். எந்த ராசிக்காரர்கள் காதலில் சிறந்தவர்கள் என்று பார்க்கலாம்.. கடகம் கடக ராசிக்காரர்கள் முழு மனதுடன் காதலிப்பார்கள். உறவுகள் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை. அவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளை ஆழமாகப் […]
zodiac marriage 1

You May Like