ரூ.1,40,000 வரை சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு..!! எப்படி விண்ணப்பிப்பது..?

BEL JOB 2025

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பொறியாளர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பணியிட விவரம்:

  • புரொபேஷனரி பொறியாளர் (எலெக்ட்ரானிக்ஸ்) – 175
  • மெக்கானிக்கல் – 109
  • கணினி அறிவியல் – 42
  • எலெக்ட்ரிக்கல் – 14
  • மொத்தம் – 340

வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் வயது தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

* இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் B.E / B.Tech / B.Sc (Engg) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* இளங்கலைப் பட்டத்தில் முதல் வகுப்பு (First Class) பெற்றிருக்க வேண்டும். அதோடு, AMIE / AMIETE / GIETE தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பளம்: மத்திய அரசு ஊதிய கட்டமைப்பின் அடிப்படையில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வருடத்திற்கு சுமார் ரூ.13 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி, வீட்டுக்கொடுப்பனை உள்ளிட்ட பல்வேறு நலன்களும் வழங்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்த நபர்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Test) நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 125 கேள்விகள் இடம்பெறும். அதில்,

தொழில்நுட்ப கேள்விகள் – 100,

பொது திறனறிவு கேள்விகள் – 25 என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நேரத்திற்குள் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். SC/ST/PwBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 30 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், ஒவ்வொரு பணியிடத்திற்கும் 5 பேர் வீதம் மதிப்பெண்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பும் பொறியாளர்கள், https://bel-india.in/job-notifications/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 14.11.2025.

Read more: வெயிட் பண்ணுங்க மக்களே.. தங்கத்தின் விலை மேலும் குறையும்.. இப்போதைக்கு வாங்க வேண்டாம்..!

English Summary

Salary up to Rs.1,40,000.. Job opportunity for engineers in a central government company..!! How to apply..?

Next Post

"ஈகோ பிரச்சனை இருக்கு.. பொதுச் செயலாளரிடம் நேரடியாக முறையிட போறேன்..!!" - செல்லூர் ராஜு பளீச்

Sun Nov 2 , 2025
"He has an ego problem.. I should complain directly to the General Secretary..!" - Sellur Raju
sellur raju

You May Like