fbpx

பரங்கிக்காய்: அட இந்த காய்ல என்ன இருக்குனு யோசிக்கிறீங்களா.? இதுல தாங்க எல்லாமே இருக்கு.!

இனிப்பு சுவையைக் கொண்ட பரங்கிக்காயில் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இது கொடி வகையைச் சார்ந்த காயாகும். சாம்பார் கூட்டு மற்றும் பொறியல் வைக்க பயன்படும் இந்த காயில் வைட்டமின் ஏ வைட்டமின் சி பீட்டா கரோட்டின் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இவற்றை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

இதை மழைக்காலங்களில் ஏற்படும் இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணையாக விளங்குகிறது. இவற்றில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் பரங்கிக்காயில் இருக்கும் ஜியாக் சாண்டின் மற்றும் கரோட்டின் போன்றவை தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இவற்றில் அதிகப்படியான இரும்புச்சத்து இருக்கிறது. இவை நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் ரத்த சோகை ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து உடலின் செரிமானத்தை சீராக்குவதோடு அஜீரணக் கோளாறு மற்றும் பசியின்மை போன்றவற்றிலிருந்தும் உடலை பாதுகாக்கிறது.

பரங்கிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கிறது. இவை கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கின்றன. கண் பார்வை குறைபாடு சரியாவதற்கும் உதவுகிறது . மேலும் இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்தின் காரணமாக மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இவை மலக்குடலின் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. பரங்கிக்காய் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் பரங்கிக்காய் சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும் . பரங்கிக்காய் அதிகமான நீர்ச்சத்தை கொண்டிருக்கிறது. இவை நமது சிறுநீர் சீராக வெளியேறுவதற்கு உதவுகின்றன.

Next Post

மக்களே...! வெள்ள நிவாரணத் தொகை 6,000 ரூபாய்... ஆன்லைன் மூலம் கிடையாது...! அரசு அதிரடி முடிவு...!

Tue Dec 12 , 2023
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5,000லிருந்து ரூ.8,000 உயர்த்தி […]

You May Like