தங்கம் விலை உயர்வால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தங்கம் என்பது, நம் மக்களின் வாழ்வியலோடு பின்னி பிணைந்துள்ளது. தங்கம் என்பது மனிதர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக, முதலீடாக திகழ்வதோடு, ஒருவரின் அந்தஸ்தை காண்பிப்பதாகவும் உள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. இது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, குடும்ப உறவுகளிடம் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாமல், சாமானிய மக்கள் திணறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவைமைத்துள்ள இந்த டாய்லெட், வரும் 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது. இந்த டாய்லெட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பளபளவென மின்னும் தங்க டாய்லெட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Readmore: திரிணாமூல் MPயின் கணக்கில் இருந்து ரூ.57 லட்சம் மோசடி : சைபர் குற்றவாளிகள் எப்படி பணத்தை திருடினர்?



