Breaking : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்..!

Magalir Urimai Thogai 2025

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு தொடங்கியது.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. மேலும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெற லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர்..

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இந்த மாவட்டத்தில் மட்டும் 1,14,000 மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக உள்ளது.. நான் உறுதியோடு சொல்கிறேன்.. தகுதி உள்ள அனைவருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் போகிறது.. மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன போது அப்படிஎல்லாம் தரமுடியாது என்று தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக சொன்னது..

நாம் ஆட்சிக்கு வந்து நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரி செய்த உடனேயே உரிமைத் தொகையை வழங்கத் தொடங்கினோம்.. ஆனால் இந்த திட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள் என்று வதந்தியை பரப்பினார்கள்.. ஆனால் இதுவரை 27 மாதங்களில் 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 என மொத்தம் ரூ.27,000 கோடி கொடுத்திருக்கிறோம்.

இது உதவித்தொகை இல்லை.. உரிமைத் தொகை.. யாருக்கு இந்த 1000 ரூபாய் கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார்கள்.. யாருக்கெல்லாம் உதவியாக இருக்குமோ அவர்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என்று நான் சொன்னேன்.. இப்பவும் சொல்கிறேன்.. தகுதி உடைய அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கும்.. தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த உரிமைத்தொகை நமது திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் நிச்சயம் தொடரும்..” என்று தெரிவித்தார்.

Read More : புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க்! 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

RUPA

Next Post

குட்நியூஸ்..! இனி வெள்ளிக்கும் கடன் பெறலாம், ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு.. முழு விவரம் இதோ..!

Mon Nov 10 , 2025
தங்க கடன்களைப் போலவே, விரைவில் மக்கள் தங்கள் அவசர நிதி தேவைகளுக்காக வெள்ளிக்கு ஈடாக கடன்களைப் பெற முடியும். உங்கள் வீட்டில் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் இருந்தால், அவை இப்போது உங்களுக்கு விரைவாக நிதி திரட்ட உதவும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, வெள்ளி அடமானக் கடன்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. RBI தனது […]
Silver 2025

You May Like