இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…! எந்தெந்த மாவட்டத்தில்…?

rain

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 14 முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 12-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நவ.13ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம்.

Vignesh

Next Post

சஞ்சு சாம்சன் CSK-க்கும், ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தானுக்கும் ஒப்பந்தம் உறுதி!. புதிய அப்டேட்!

Tue Nov 11 , 2025
ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸை விட்டு வெளியேறி சஞ்சு சாம்சனுக்கு ஈடாக ராஜஸ்தான் ராயல்ஸில் சேர உள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸை விட்டு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு செல்ல உள்ளனர். கிரிக்பஸின் கூற்றுப்படி, மூன்று வீரர்களும் பரிமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இருப்பினும், பரிமாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் […]
ipl jaddu sam karan samson

You May Like