ரூ.1,26,100 வரை சம்பளம்.. செபி நிறுவனத்தில் உதவி மேலாளார் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..

job

நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) என்பது இந்திய நிதி சந்தைகளைக் கட்டுப்படுத்தும் முக்கியமான சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நேரடியாக SEBI மூலமாகவே நிரப்பப்படுகின்றன. அந்த அடிப்படையில், Officer Grade A (Assistant Manager) பதவிக்கான 110 வேலைவாய்ப்புகள் குறித்து கடந்த அக்டோபர் 8-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.


பணியிட விவரம்:

  • பொது -56
  • சட்டம் – 20
  • தகவல் தொழில்நுட்பம் – 22
  • ஆய்வு – 4
  • மொழி – 3
  • எலெக்ட்ரிக்கல் பொறியியல் – 1
  • சிவில் பொறியியல் – 3

வயது வரம்பு: விண்ணப்பதார்கள் அதிகபடியாக30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பொது பிரிவு: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் (Post Graduate Degree) அல்லது முதுகலை டிப்ளமோ (Post Graduate Diploma) பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்டம் (Law), பட்டயக் கணக்காளர் (CA), பட்டய நிதி ஆய்வாளர் (CFA), நிறுவனச் செயலாளர் (CS) அல்லது செலவுக் கணக்காளர் (Cost Accountant) தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சட்டப் பிரிவு: சட்டத்தில் இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree in Law) பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் சட்டப் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பப் பிரிவு: ஏதேனும் ஒரு பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree in Engineering) பெற்றிருக்கலாம், அல்லது கணினி அறிவியல் (Computer Science), கணினி பயன்பாடு (Computer Application), அல்லது தகவல் தொழில்நுட்பம் (Information Technology) ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் (Master’s Degree) பெற்றிருக்கலாம்.

ஆய்வு பிரிவு: பொருளாதாரம் (Economics), வணிகம் (Commerce), தொழில் நிர்வாகம் (Business Administration), பொருளாதாரம் மற்றும் நிதி (Economics & Finance), புள்ளியியல் (Statistics), அல்லது தரவு அறிவியல் (Data Science) போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மொழி பிரிவு: இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம், அல்லது வேறு பாடத்துடன் இந்தி மொழி இணைந்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்கலாம்.

மின்சாரம் மற்றும் சிவில் பொறியியல்: பொறியியல் துறையில் பட்டப்படிப்பு (Bachelor’s Degree in Engineering) அவசியம். அதனுடன் தொடர்புடைய பணியனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம்: செபி உதவி மேலாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.62,500 முதல் அதிகபடியாக ரூ.1,26,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: மூன்று கட்ட தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆன்லைன் வழி தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 3 கட்டமாக நேர்காணலுக்கு தகுதிப்பெறுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://www.sebi.gov.in/ என்ற செபி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2025

Read more: 13 பேரை காவு வாங்கிய கார் வெடிப்பு சம்பவம்.. பதற வைக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது!

English Summary

Salary up to Rs.1,26,100.. Assistant Manager Job in SEBI Company..!! Don’t miss it..

Next Post

SIR-க்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Tue Nov 11 , 2025
தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் […]
sc sir

You May Like