விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (34). சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், அதெ கிராமத்தைச் சேர்ந்த சசிகலா (27) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு மனைவியை பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு சத்யராஜ் சென்னைக்கு சென்றுவிட்டார்.
விடுமுறை நாட்களில் மனைவியை பார்க்க சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். இதற்கிடையே சத்யராஜ் வீட்டின் எதிரே வீட்டில் வசிக்கும் ஜானகிராமன் (28) என்பவருக்கும் சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில், கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவருக்கும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் சத்யராஜ்க்கு தெரியவரவே வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் இருவரும் சேர்ந்து சத்யராஜை தீர்த்துககட்ட திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சசிகலா தனது கணவர் சத்யராஜை சென்னையில் இருந்து வரவழைத்துள்ளார். அன்று இரவு சசிகலா சத்யராஜ் உடன் மொடையூர் ஆற்றுப்பாலம் கீழ் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த கள்ளக்காதலன் ஜானகிராமன் சத்யராஜின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அதன்பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்கள். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சத்யராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சசிகலா, ஜானகிராமன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சத்யராஜை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஜானகிராமன், சசிகலா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டார்.
Read more: SIR-க்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!



