உஷார்…! 8 மாவட்டத்தில் மாவட்டத்தில் கனமழை…! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

rain 2025 2

டெல்டா மாவட்டங்களில் 17, 18-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 17-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 18-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

UPSC மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை...! இன்று முதல் விண்ணப்பம்...!

Thu Nov 13 , 2025
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு […]
money tn govt 2025

You May Like