தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
அதிமுகவில் அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காமல் சிரமப்படும் சில முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் திமுக பக்கம் நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவிலிருந்து நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கத்தில், திமுக ‘ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் ஒரு ரகசியத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு, திமுகவிற்கு வரச் செய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில மாதங்களாக அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
Read more: கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெற வேண்டுமா..? விவசாயிகளே இந்த டிரிக்ஸை யூஸ் பண்ணுங்க..!!



