வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள், மன உளைச்சல் ஏற்படுத்தப்படுகிறது. இதை சரிசெய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது.
சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை துன்புறுத்துகின்றனர். இதை உடனடியாக கைவிட வலியுறுத்தி நேற்று முதல் எஸ்ஐஆர் தொடர்பான படிவங்களைப் பெறுவது, இணையத்தில் பதிவேற்றம் செய்வது (Digitisation), ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது என அனைத்துப் பணிகளையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



