விரைவில் திமுகவில் இணையும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…!

jayaram 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுவரை 86 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் குறைகளை சரிசெய்ய திமுக தலைமை உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அதன்படி தொடர்ந்து 40-வது நாளாக நடைபெற்ற நிகழ்வில் கோவை மாவட்டத்தில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது எஸ்ஐஆர் பணிகள் குறித்து முதல்வர் விசாரித்தபோது, “அதிமுக பிஎல்ஏ2-க்கள் யாருமே களத்துக்கே வருவதில்லை. நமது நிர்வாகிகள் மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்கள்” என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக-வே வென்றது. ஆனால், இந்த முறை நிச்சயம் அதிமுக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்டும். அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்த வேண்டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உதவித் தொகை பெற கட்சியினர் உதவ வேண்டும்” என்று மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல அதிமுகவில் உள்ள கொங்கு மண்டல தலைவர்களை இணைப்பதற்கான வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமனிடம் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக ரகசியமாக சென்னையில் திமுகவின் சீனியர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல்!. அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல்!. 14 பேர் பலி!. லெபனானில் பயங்கரம்!.

Thu Nov 20 , 2025
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இஸ்ரேல், லெபனான் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையே 2024ம் ஆண்டு போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிடான் நகரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் […]
israel airstrikes lebanon

You May Like