fbpx

இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர்.! காலையில் மரணம் அடைந்த சோகம்.! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்.!

கோவை அருகே இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் காலையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற மாணவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டு இருக்கிறார். பின்னர் இரவு உறங்கச் சென்ற அவர் காலையில் எழும்பாததை தொடர்ந்து அவரை சகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த சில வருடங்களாகவே பரோட்டா சாப்பிடுவதால் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. பரோட்டா என்பது அனைவருக்கும் விருப்பமான உணவு. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பரோட்டாவிற்கு என்று ஒரு ஸ்பெஷல் இருக்கிறது . எனினும் பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். மைதாவானது கோதுமை பிரான் மற்றும் ஜெர்மி ஆகிய பொருள்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவற்றில் பிரான் அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமினை கொண்டிருக்கிறது.

ஆனால் ஜெர்மியில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றால் மைதாவில் குளுட்டன் அதிகமாக இருக்கிறது. இது உணவு செரிமானத்தை தாமதமாக்குகிறது. இவற்றால் செரிக்காத உணவு கொழுப்பாக பரவி ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும் மைதா கணைய நீர் சுரப்பியை சோர்வடையச் செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இது போன்ற பாதிப்புகள் தொடர்ந்து பரோட்டா சாப்பிடுவதால் உருவாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Next Post

தஞ்சை அருகே பயங்கரம்: 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு.! 5 இளைஞர்கள் கைது.!

Fri Dec 22 , 2023
தஞ்சாவூர் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று அபினேஷ் என்ற இளைஞர் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞருடன் சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அபினேஷ் […]

You May Like