உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு (Enteric Fever) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுடைய கடையில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 செலுத்தி தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
மேலும் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட சான்றிதழை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைத்து ஹோட்டல்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 2 ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசியையை செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



