வங்கக்கடலில் உருவாகிறது சென்யார் புயல்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்..?

cyclone rain

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, நவம்பர் 26 ஆம் புயல் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சென்யார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more: கண் பார்வை மேம்படும்.. மலச்சிக்கலுக்கு தீர்வு.. வேகவைத்த சோளம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..?

English Summary

Cyclone Senyar is forming in the Bay of Bengal.. Where will it rain in Tamil Nadu..?

Next Post

கறிக்கோழி விலை சர்ருனு குறைஞ்சிடுச்சு..! ஆனால் முட்டை விலை..? - முழு விவரம் இதோ..

Sun Nov 23 , 2025
Chicken prices have decreased significantly..! But egg prices..? - Here are the full details..
egg chicken 2025 07 2ec21ea989480ea20dace778a5f36b90 1

You May Like