“கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிரா பேச மாட்டேன்..!” – சொல்வது நாஞ்சில் சம்பத்..

nanjil sampath

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருக்கப் போகிறது என்பது தான் தற்போதைய கள நிலவரம். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலே பாஜக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் திட்டவட்டமாக அறிவித்த்தார்.


இதற்கிடையே ’தி.மு.க கூட்டணிக்கு அரணாக இருக்கிறேன்’ எனக் கூறிவரும் நாஞ்சில் சம்பத், மறுபக்கம் தி.மு.க அரசைச் சாடும் விஜய்யை பாராட்டுவதோடு, அவரது அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பேசிவருகிறார். அவரது இந்த நிலைப்பாடு தி.மு.க. தலைமைக்குப் பிடிக்காததால், அவரை அக்கட்சியில் இருந்து நீக்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் அழைத்தால் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்காக பேச செல்வேன் என்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதிமுகவை விட தமிழக வெற்றிக்கழகம் வலிமையாக உள்ளது. இதனால் பல தொகுதிகளில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவும் என்று கூறிய அவர், களநிலவரம் அப்படிதான் இருக்கிறது என்றார். மேலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிராக பேச மாட்டேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.

அவரது இந்த பேச்சு திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் ‘விஜய் கேட்டால் அரசியல் ஆலோசனை வழங்குவேன்’ என நாஞ்சில் சம்பத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Read more: ஒரே ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி தொலைபேசி எண்கள்…! ட்ராய் அதிரடி நடவடிக்கை…!

English Summary

“I won’t speak against Vijay even if I’m given a crore of rupees..!” – says Nanjil Sampath..

Next Post

வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Tue Nov 25 , 2025
What to do if there is a gas leak at home..? You must know..
gas leak

You May Like