கணவருக்கு மது கொடுத்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. திடீரென போதை தெளிந்த ஸ்ரீதரன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்..!

affair murder

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் பரிமளா தம்பதி. ஸ்ரீதரின் நண்பன் கார்த்திக்கேயன். தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கார்த்திகேயன், நண்பர் ஸ்ரீதரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ஸ்ரீதரின் மனைவி பரிமளா உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.


இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். வெளியில் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதரன்,கார்த்திகேயனுடன் சேர்ந்து வீட்டிலேயே அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஸ்ரீதரன் வீட்டில் வைத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

மது போதையில் ஸ்ரீதரன் மயங்கி கிடக்க, வீட்டில் பரிமளா உடன் கார்த்திகேயன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். போதை தெளிந்த ஸ்ரீதரன் வீட்டின் படுக்கை அறையில் பார்த்தபோது கார்த்திகேயன் மற்றும் பரிமளா இருவரும் ஒரே அறையில் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஸ்ரீதரனை சமாதானம் செய்வதாக கூறி, கார்த்திகேயன் மது அருந்துவதற்காக ஈங்கூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு வரவே தான் வைத்திருந்த கருப்பு டீ சர்ட்டை பயன்படுத்தி ஸ்ரீதரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு ஸ்ரீதரை கொலை செய்த விஷயத்தை கள்ளக்காதலன் கார்த்திகேயன் பரிமளாவிடம் கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இருவரும் சாக்கு மூட்டையில் கணவரின் உடலை கட்டி புதர் பகுதியில் மறைத்து வைத்து ஈரோட்டில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீச அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூட்டையை அவிழ்த்து பார்க்கும் பொழுது அதில் ஸ்ரீதரன் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக ஸ்ரீதரனின் உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பரிமளா மற்றும் கார்த்திக்கேயன் இருவரும் சேர்ந்து ஸ்ரீதரனை கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் இணைந்து மனைவி,கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: சட்டம் ஒழுங்கை காப்பதில் ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும்…! வீண் பெருமை பேச கூடாது…!

English Summary

Having fun with a prostitute after giving alcohol to her husband.. Sridharan suddenly sobered up..

Next Post

கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் முட்டைகோஸ்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா..?

Fri Nov 28 , 2025
Cabbage helps reduce bad cholesterol.. Do you know who should not eat it..?
Cabbage 1

You May Like