தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம் (RGNIYD) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பின் கீழ் 6 வெவ்வேறு பதவிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
பணியிட விவரம்:
தேர்வு கட்டுப்பாட்டாளர் – 1
நிதி அதிகாரி – 1
நூலகர் உடன் படிவங்கள் அதிகாரி – 1
உதவியாளர் – 1
ஆலோசகர் (நிர்வாகம்) – 1
ஆலோசகர் (அகாடமிக்ஸ்) – 1
வயது வரம்பு:
தேர்வு கட்டுப்பாட்டாளர் – 55 வயது வரை
நிதி அதிகாரி – 57 வயதிற்கு கீழ்
நூலகர் உடன் படிவங்கள் அதிகாரி- 30 வயது வரை
உதவியாளர் – 27 வயது வரை
ஆலோசகர் (நிர்வாகம்) – 62 வயதைக் கடந்திருக்கக்கூடாது
ஆலோசகர் (அகாடமிக்ஸ்)- 62 வயதைக் கடந்திருக்கக்கூடாது
தகுதிகள்:
தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன், 15 வருடங்கள் உதவி பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 15 ஆண்டுகள் நிர்வாக பணியில் அனுபவம் தேவை. கணினி திறன் அவசியம்.
நிதி அதிகாரி பதவிக்கு கணக்கு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அவசியமாகும்.
நூலகர் பதவிக்கு நூலக அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது கலை, அறிவியல், வணிகம் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு இளங்கலை நூலக அறிவியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி உபயோகத்தில் அனுபவம் அவசியம்.
உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு திறன் அவசியம்.
ஆலோசகர் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். நிலை 10 ஊதியத்துடன்ன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். கணினி திறன் அவசியமாகும்.
சம்பளம்:
- தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை சம்பளம்.
- நிதி அதிகாரி பதவிக்கு ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை சம்பளம்.
- நூலகர் பதவிக்கு ரூ.9,300 முதல் ரூ.4,600 வரை சம்பளம்.
- உதவியாளர் பதவிக்கு ரூ.5,200 முதல் 20,200 வரை சம்பளம்.
- ஆலோசகர் பதவிக்கு கடைசியாக பெற்ற ஊதியத்திற்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? ஸ்ரீபெரும்பத்தூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.rgniyd.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
The Assistant Registrar (Administration)
Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD)
Ministry of Youth Affairs & Sports, Government of India
Bangalore to Chennai Highway, Sriperumbudur – 602 105
Kancheepuram District, Tamil Nadu



