சூப்பர் வாய்ப்பு.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை..! தேர்வு கிடையாது..!

job 7

தேசிய ஊரக நலத்திட்டத்தின் (NHM) கீழ், திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் பல்வேறு பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, சூப்ரவைசர், சுகாதார பார்வையாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், கீளனர், தர மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணியிட விவரம்:

  • மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் – 1
  • டிபி சுகாதார பார்வையாளர் – 2
  • நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் – 2
  • டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் – 1
  • தூய்மையாளர் – 1
  • தர மேலாளர் – 1

வயது வரம்பு: அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் மற்றும் நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் ஆகிய பதவிகளுக்கு 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர்:

  • இளங்கலை பட்டப்படிப்பு அல்லது சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • கணினி ஆப்ரேட்டர் சான்றிதழ் படிப்பு
  • 2 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

டிபி சுகாதார பார்வையாளர்:

  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு + சான்றிதழ் படிப்பு அல்லது காசநோய் சுகாதார பார்வையாளர் சான்றிதழ் படிப்பு
  • கணினி ஆப்ரேஷன் சான்றிதழ் படிப்பு

நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர்: GNM டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்: கணினி அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி பயன்பாட்டில் டிப்ளமோ

தூய்மையாளர்: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தர மேலாளர்:

  • MBBS / Dental / AYUSH / Nursing / சமூக அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு
  • மருத்துவமனை நிர்வாகம் அல்லது மருத்துவ மேலாண்மை துறையில் முதுகலை பட்டப்படிப்பு
  • மருத்துவ நிர்வாக பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

  • மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் – ரூ.19,800
  • டிபி சுகாதார பார்வையாளர் – ரூ.18,000
  • நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் – ரூ.13,500
  • டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் – ரூ.13,500
  • தூய்மையாளர் – ரூ.8,500
  • தர மேலாளர் – ரூ.40,000

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை நிரப்பி மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

  • பிறப்பு சான்றிதழ்
  • கல்வித்தகுதி சான்றிதழ்
  • அடையாள அட்டை (வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம்)
  • அனுபவ சான்றிதழ்

கடைசி தேதி: 09.12.2025

Read more: ஏர்டெல் 365 நாள் ரீசார்ஜ் திட்டம்.. இரண்டு சிம் பயனாளிகளுக்கு ஏற்ற சூப்பர் பிளான்ஸ்..!!

English Summary

The Tirunelveli District Welfare Association has issued a notification to fill vacancies in various posts.

Next Post

1,000க்கும் மேற்பட்டோர் பலி.. தென்கிழக்கு ஆசியாவில் சென்யார் & டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவுகள் என்னென்ன?

Mon Dec 1 , 2025
சென்யார் மற்றும் டிட்வா என்ற 2 சக்திவாய்ந்த புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.. இந்த புயல்களால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.. இது இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையை அதிகம் தாக்கியது.. இந்தியாவின் தெற்கு கடற்கரையிலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. மலாக்கா ஜலசந்தியில் முதலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் சென்யார் புயலாக மாறியது, இப்போது தென் சீனக் […]
cycone dtiwah

You May Like