fbpx

தென்மாவட்ட மக்களுக்கு 29-ம் தேதி முதல் ரூ.6,000 நிவாரணத் தொகை…! தமிழக அரசு அறிவிப்பு…

மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நாளை முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.

எவ்வளவு தொகை…?

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரண தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த நாட்டு படகுகளுக்கு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், விசைப் படகுகளுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாகவும் நிவாரண தொகை உயர்த்திவழங்கப்படும். பயிர், கால்நடைகள், கட்டுமரங்களுக்கான நிவாரண தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும்.

Vignesh

Next Post

முக்கிய அறிவிப்பு...! 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்...!

Fri Dec 29 , 2023
10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. இன்று முதல் ஜனவரி 10-ம் தேதி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று இணைய வழியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். டிச. 31, ஜனவரி 1, ஜனவரி 7 ஆகிய நாட்கள் நீங்கலாக இடைப்பட்ட தேதிகளில் அரசு தேர்வுகள் துறை சார்பில் […]

You May Like