இந்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக முத்திரைகள் மற்றும் புவியியல் குறியீடுகள் சோதனையாளர் பதவி, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றில் காலியாக உள்ள நூறு காலியிடங்களுக்கும், யுபிஎஸ்சி-யில் இரண்டு துணை இயக்குநர் பதவிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வரவேற்கிறது.
விரிவான விளம்பர எண். 14/2025, வேட்பாளர்களுக்கான வழிமுறைகளுடன் ஆணையத்தின் வலைத்தளமான https://upsc.gov.in-ல் பதிவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்ப போர்டல் https://upsconline.nic.in மூலம் 2025 டிசம்பர் 13 முதல் 2026 ஜனவரி 01, வரை விண்ணப்பிக்கலாம்.வேட்பாளர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளைப் பின்பற்ற என தெரிவிக்கப்பட்டுள்ளது.



