நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரவீன்(22). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும், ஊட்டியை சேர்ந்த10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஊர் சுற்றி வந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் பிரவீனுக்கு, ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரையும் காதலிப்பதாக கூறி சுற்றி வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கல்லூரி மாணவி கர்ப்பம் அடைந்தார். மாணவி கர்ப்பமானது தெரியவந்ததால், அவரது வீட்டிற்கு தெரியாமல் பிரவீன் மாணவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் கல்லூரி மாணவி 18 வயது நிறைவடைந்தவராக இருந்ததால் பிரச்சினை ஏற்படவில்லை. மேலும் அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு கடந்த 3-ந் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டிக்கிறது. அவரை தாய் ஊட்டி அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனால் மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் அதிலிருந்து மீள்வதற்குள், சிறிது நேரத்தில் பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணையில் பிரவீன் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பிரவீனை போலீசார் கைது செய்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் கை குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
Read more: ரூ.15 லட்சம் முதலீட்டில் ரூ.22 லட்சம் லாபம்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?



