தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. திறந்தவெளி வாகனத்தில் சென்ற முதல்வர் விஜய் சிங்கப்பெண் அதிரடி படையை பார்வையிட்டு, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.. பின்னர் முதல்வர் விஜய் அணிவகுத்து சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை பெண் காவலர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதையை ஏற்றார்..
இதை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்துப்பாடலுடன் இந்த விழா தொடங்கியது.. முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கான லோகோவை வெளியிட ஐஜி பவானீஸ்வரி அதனை பெற்றுக்கொண்டார்.. பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடர்பான காணொளி ஒளிபரப்பப்பட்டது.. மேலும் இந்த சிறப்புப் படையின் ரோந்து வாகனமும் அறிமுகம் செய்யப்பட்டது.. இந்த ரோந்து வாகனத்தை முதல்வர் விஜய் இயக்கி பார்த்தார்.. இந்த விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையில் உள்ள 500 பெண் காவலர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்..
சிங்கப்பெண் அதிரடி சிறப்புப்படை முதல்வர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இயங்குகிறது.. பெண் காவலர்களிடம் இருந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவலர்கள் தனித்து தெரியும் வகையில் சிறப்பு சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.. அடர் நீல நிற சட்டை, காக்கி பேண்ட், கருப்பு தொப்பி, தோள் பட்டையில் காக்கி பெல்ட், எடை குறைவான கருப்பு ஷூ என பிரத்யேக சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ள இடங்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை கண்காணிக்கும்.. பேருந்து ,ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி பெண்கள் அதிகம் கூடும் இடங்களை சிங்கப்பெண் அதிரடி படை கண்காணிக்கும்.. சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் மாவட்டங்கள், முக்கிய நகரங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை செயல்படும்..
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் அப்பகுதி சிங்கப்பெண் படைக்கு தெரிவிக்கப்படும்.. சம்பவ இடத்திற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்..



