மகாராஷ்டிரா மாநிலம் கோட்ரி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ். 36 வயதாகிய நாகேஷுக்கு திருமணம் ஆகாத நிலையில் குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். இறுதியில் ஒரு புரோக்கர் மூலம் பிரித்தி ராவத் என்ற பெண்ணுடன் நாகேஷூக்கு திருமணம் நிச்சயமாகியது.
இந்த திருமண ஏற்பாட்டிற்காக, ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கமிஷனாக புரோக்கர் வாங்கியுள்ளார். அதன்பிறகு எளிமையான முறையில் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு அனைவரும், மணமகன் வீட்டுக்கு சென்றனர். வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் மணமகள் பிரீத்தி கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
திருமணமான முதல் நாளே, அதுவும் மணக்கோலத்தில் மணப்பெண் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் ‘ஏதோ தவறு நடக்கிறதே’ என்று எண்ணி, மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். சுதாரித்துக்கொண்ட மணமகன் வீட்டார், மணமகளைத் தேடிச் சென்றனர். பஸ் ஸ்டாண்டில் மணப்பெண்ணை சுற்றி வலைத்த உறவினர்கள் எங்கே செல்கிறாய் என கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார், உடனடியாகப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மணமகள் பிரித்தி ராவத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இப்போதுதான், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, பிரித்தி ராவத் ஒரு திருமண மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதும், பணத்திற்காகவே இந்த திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த மோசடிக்கு மூளையாக இருந்தது கல்யாண புரோக்கர் என்பதும், அவர் தான் அந்த பெண்ணின் அத்தை என்பதும் தெரியவந்தது.. இந்த கும்பல், பணத்திற்காக மணமகளாக நடித்து, திருமணத்துக்குப் பிறகு தப்பி செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷயம் தெரிந்து தலைமறைவாக உள்ள புரோக்கரையும் தேடி வருகின்றனர்.
Read more: ”2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்..” பொதுக்குழுவில் இபிஎஸ் உறுதி..!



