கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முண்டங்கா பகுதியை சேர்ந்தவர் சித்திர பிரியா(19). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 21 வயதாகும் ஆலன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 5-ந் தேதி சித்திர பிரியா விடுமுறையில் சொந்த ஊருக்குள் வந்துள்ளார்.
மறுநாள் மாலை கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் சித்திர பிரியாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. அதன்பின்னர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதோடு, கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்கள்.
இதில் சம்பவத்தன்று ஆலனுடன், சித்திர பிரியா இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஆலனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சித்திர பிரியாவை வீட்டில் விட்டு விட்டு திரும்பி சென்றதாக தெரிவித்தார். இதற்கிடையே மனப்பாட்டுச்சிரா கூராப்பள்ளி பகுதியில் உள்ள மைதானத்தில் சித்திர பிரியா தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆலனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த சித்திர பிரியா, வேறொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்தாராம். அந்த நபருடன் செல்போனில் எடுத்த புகைப்படத்தை ஆலன் பார்த்து விட்டார். இதன் பின்னர் இருவருக்கும் இடையே தகறாரு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சித்திரபிரியாவை கல்லால் தலையில் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



