இந்த வருடம் விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்… 3 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி…!

pm modi sco meet 1

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரியில் தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின்போது, தமிழக விவசாயிகளுடன் இணைந்து அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளார்.


தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜகவை பொருத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று அவர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக, பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேநேரம் ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரியில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 13-ம் தேதி தமிழகம் வரும் அவர் 15-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக, தமிழக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ராமேசுவரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 4.o நிறைவு விழா, புதுக்கோட்டையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தும் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிறைவு விழா ஆகியவற்றிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த வருகை, கிராமப்புற மக்கள் மற்றும் தமிழகத்தின் கலாச்சார ரீதியான ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட ஒரு முக்கிய மக்கள் சந்திப்பு முயற்சியாக இருக்கும். இந்த நிகழ்ச்சி, கிராமப்புற மக்களுடனான பாஜகவின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Mon Dec 15 , 2025
பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]
School Money 2025

You May Like