பெரும் சோகம்…! முருக பக்தர் மதுரையில் தீக்குளித்து உயிரிழப்பு…! அண்ணாமலை இரங்கல்…!

annamalai 2

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.


மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ ஓட்டிச் சென்ற ஒருவர் புறக்காவல் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, திறந்து கிடந்த புறக்காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.

பின்னர், ஏற்கெனவே தயாராக எடுத்துச் சென்ற கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவி, புறக்காவல் நிலையத்துக்கு உள்ளேயே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு பதறிப்போன வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் அங்கு சென்று, புறக்காவல் நிலையத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி, தீயை அணைத்த னர். எனினும், பலத்த தீக்காய மடைந்திருந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலில் தீ வைக்கும்போது கோஷம் எழுப்பியது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நூறு நாள் வேலைத் திட்ட மசோதா வேண்டாம்...! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

Fri Dec 19 , 2025
நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை செயல்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்து, அதற்கு பதிலாக, ‘விபி-ஜி ராம் ஜி’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததற்கு தமிழக அரசின் ஆழ்ந்த கவலை மற்றும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் […]
mk stalin n 1

You May Like