அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு..! திருப்பூர் காவல்துறை அதிரடி..!

annamalai arrest

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..

திருப்பூர் மாவட்டம் இடுவார் ஊராட்சி சின்னகாளி பாளையம் பகுதியில் மாநகராட்சியின் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 16-ம் தேதி குப்பை லாரிகளை சிறைப்பிடித்தவர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது..


மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. இதனை கண்டிக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார்.

ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காததால், காரில் இருந்தவாறே பெசினார்.. இதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்திருந்தனர்.. எனினும் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவினர் காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..

இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

Read More : மாதம் ரூ.1,25,000 சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் ஆசிரியர் காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

The Tiruppur North police have registered a case against 600 people, including former BJP state president Annamalai.

RUPA

Next Post

யூனிபார்ம் தைக்க வந்த சிறுமியிடம் அத்துமீறிய டெய்லர்.. பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! விசாரணையில் பகீர்..

Fri Dec 19 , 2025
Two incidents in Madurai and Vellore districts have raised serious concerns about child safety.
Rape 2025 1

You May Like