“என் தாய்மை உணர்வுகள் விழித்துக் கொண்டது” கட்டா குஸ்தி 2க்கு பின் நடிகை அளித்த பேட்டி..

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான், ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் மாடலிங் துறையில் நுழைந்த அவர், பின்னர் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். பொன்னியின் செல்வன், மாமன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் அநேகர்.


விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதன் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில், இரண்டாம் பாகமும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திருமணத்தை குறித்து ஒவ்வொரு நடிகைகளுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஐஸ்வர்யா லட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணத்தைக் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறும் போது, என் அனுபவத்தில் பல திருமணங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் மிகவும் குறைவு. இதனால் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் உறவில் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்.

இந்நிலையில் தற்போது கட்டா குஸ்தி 2 படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி திருமணத்தின் மீதான தனது கருத்தை மாற்றியுள்ளார். ஆம், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் திருமணம் எனும் அமைப்பில் நுழைவதில் எனக்கு பல சிக்கல்கள் இருக்கிறது, ஆனால் கட்டா குஸ்தி 2 படத்தில் ஒரு குழந்தையின் தாயாக நடித்த போது என் தாய்மை உணர்வுகள் விழித்துக் கொண்டன. எனக்காக வருபவர் ஒரு நல்ல தந்தையாக இருப்பார் என்றும், என்னை விட்டு ஓடிப் போக மாட்டார் என்றும், குறைந்தபட்சம் என்னால் கணிக்க கூடிய ஒருவருடன் நான் குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இது குறித்து முன்பு ஒரு கருத்தை தெரிவித்து இருந்தேன், ஆனால் தற்போது என் வாழ்க்கை முறையை நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

Also Read: மூட்டு வலி என்ன? எல்லா வலியும் பறந்துரும்! அதுக்கு முதல்ல இத பண்ணுங்க…

Saranya

Next Post

பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்து தந்தை செய்த கொடூரம்!! வீடியோவை பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Wed Jul 1 , 2026
தர்மபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 45 வயதான சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலுடன் பங்குசந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங் செய்து வரும் இவருக்கு, 35 வயதான சரண்யா என்ற மனைவியும், 14 வயதான சாத்விகா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள், தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் […]
WhatsApp Image 2026 07 01 at 2.58.47 PM

You May Like