அமமுகவுக்கு மிரட்டல்..? டென்ஷன் ஆன டிடிவி தினகரன்..! பரபர ப்ரஸ் மீட்..

ttv dinakaran2234 1595052218

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற கட்சிகள் எங்களிடம் அன்போடு, மரியாதையோடு அணுகி கூட்டணிக்கு வரவேண்டும் என்று பேசி வருகிறார்கள். நாங்கள் எங்காவது போய் வந்தால் உடனே மிரட்டுகிறார்கள் எனச் சொல்வதா? அமமுகவும் சரி, டிடிவி.தினகரனும் சரி, எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம்.


எங்களை யாரும் மிரட்ட முடியாது. எங்களை மரியாதையோடு அணுகி வருகிறார்கள். கட்சி நிர்வாகிகள் விரும்பும் முடிவைத்தான் நான் எடுப்பேன். தலைமை முடிவெடுத்துவிட்டு, அதை தொண்டர்கள் மீது திணிக்கும் கட்சி நாங்கள் அல்ல . 2026 சட்டசபை தேர்தலில் அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது. எத்தனையோ அரசியல் ஜாம்பவான்கள் எல்லாம் சுயநலத்திற்காக வெளியேறிய பிறகும் உயிரோட்டத்தோடு இருக்கிறது இந்த இயக்கம்.

அதிமுக உடன் இணைகிறோம் என்றால் அந்தக் கட்சியுடன் ஒன்றிணைவது இல்லை. கூட்டணியில் இருப்பது. தை பிறந்தால் வழி பிறக்கும். ஜெயலலிதா பிறந்தநாளுக்குப் பிறகு எங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படையாக அறிவிப்போம்” என்றார். மேலும், “தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவது கடினம். திமுக ஆட்சியில் செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் வீதிக்கு வந்து போராடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

Read more: காலை நேரம் இப்படித் தொடங்கினால்.. நாள் முழுவதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும்..!! 8 முக்கிய டிப்ஸ் இதோ..

English Summary

Threat to AMMK..? TTV Dinakaran tense..! Parapara press meet..

Next Post

முட்டையில் புற்றுநோய் மருந்தா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த FSSAI..!!

Mon Dec 22 , 2025
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தற்போது அதிரடி விளக்கமளித்துள்ளது. முட்டைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்தியின் பின்னணி என்ன..? சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணியான ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) என்ற […]
Egg 1

You May Like