கணவனின் சந்தேக புத்தியால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு.. எந்த பெற்றோரும் பார்க்க கூடாத கோலம்!

marriage death

திருமணம் ஆன ஒரே மாதத்தில் கணவரின் சித்திரவதையால் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறங்கேறியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.


கர்நாடக மாநிலம், நெலமங்கலா தாலுகாவை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. இவருக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனது கணவருடன் வசித்து வந்தார். இருவரும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வரியாவிற்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் லிகித் சிம்ஹாவுக்கு வந்துள்ளது. இதனால் திருமணம் ஆனது முதல் ஐஸ்வரியாவை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதை அறிந்த பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு வந்து மருமகனிடம் சமரசம் பேசிச் சண்டையை முடித்து வைத்துள்ளனர்.

அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பிறகு, மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் தனது புடவையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த லிகித் சிம்ஹா, மனைவி தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகளின் மரணத்திற்கு கணவர் தான் காரணம் என பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் லிகித் சிம்ஹாவைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: 10,000 அடிகள் நடக்க வேண்டாம், இத்தனை அடிகள் நடந்தால் போதும்! பெண்களே, இதை தெரிஞ்சுக்கோங்க..!

English Summary

A young woman’s tragic end comes just one month after her marriage due to her husband’s suspicions.

Next Post

வேலை செய்வதற்கு சிறந்த நாடுகள் இவை தான்! இந்த 5 நாடுகளில் பணிச்சூழல் எப்படி இருக்கும் தெரியுமா?

Fri Dec 26 , 2025
இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேலை-வாழ்க்கைச் சமநிலை மிகவும் அவசியம். ஆனால், நீண்ட வேலை நேரம், அலுவலகத்துடன் தொடர்ச்சியான டிஜிட்டல் தொடர்பு மற்றும் அதிகரித்து வரும் மன அழுத்தம் ஆகியவை பலரையும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதை கடினமாக்கியுள்ளன. இந்த அழுத்தங்கள் அனைத்தையும் கடந்து, தங்கள் வேலை-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்தியுள்ள 5 நாடுகளையும், அங்கு வேலை வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்கலாம். […]
world countries 1

You May Like