Flash : காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. ஒரே நாளில் ரூ.4,000 குறைவு..! தங்கம், வெள்ளி விலை சரிவு..!

gold silver

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று கலை ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 281க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ. 4000 குறைந்து ரூ. 2,81,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்: இந்தியா எவ்வளவு கடன்பட்டிருக்கிறது, எந்தெந்த நாடுகள் அதிகம் கடன் கொடுக்கின்றன?

RUPA

Next Post

21-Day Walking Challenge: நிமிடத்திற்கு 100 அடிகள்.. உடல் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

Mon Dec 29 , 2025
21-Day Walking Challenge: 100 Steps Per Minute.. You'll Feel the Physical Transformation!
walk 2

You May Like