திடீரென தவெகவை அட்டாக் செய்யும் அதிமுக.. கண்டுகொள்ளாத விஜய்.. இபிஎஸ் கனவு பலிக்குமா?

EPS vijay 2025

கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெகவுக்கு ஆதரவாக அதிமுக குரல் கொடுத்து வந்தது. இதனால் அதிமுக – தவெக கூட்டணி அமையலாம் என பேச்சுக்கள் அடிப்பட்டது. ஆனால் அதன்பிறகு நடந்து தவெக பொதுக்குழுவில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவரை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலரும் தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசும் போது கூட எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி வந்தார். இதனால் விஜய்யின் வருகை அதிமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவாகி நிற்கிறது.

மறுபுறம் அதிமுகவில் இளைஞர்கள் இணையாமல் தவெக பக்கம் செல்வதும் அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் பலரும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில், அதிமுக களத்தில் இல்லை என்று கூறும் விஜய்க்கு நாவடக்கம் தேவை.. நயன்தாராவுக்கு கூட கூட்டம் கூடும் என்று கடுமையாக விமர்சித்தார்.

தற்போது செல்லூர் ராஜூவை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். திருத்தணியில் நடந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், புதியக் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

Read more: ரூ.93,000 மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ரூ.32,990க்கு..! அசத்தல் ஆஃபர்களை வழங்கும் முன்னணி நிறுவனங்கள்..!

English Summary

AIADMK suddenly attacks tvk.. Vijay ignores it.. Will EPS dream come true?

Next Post

மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற அருமையான வாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? - முழு விவரம்..

Tue Dec 30 , 2025
A great opportunity to get an internship in a central government organization.. Who can apply..?
job 1

You May Like