இரவு முழுக்க ஆபாச மெசேஜ்.. வீடியோ கால்.. ஆசிரியர்கள் செய்ற வேலையா இது..? மாணவி கதறல்..

Rape Sex 2025

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த வருடம் பிளஸ் டூ படித்து முடித்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவிக்கு தொடர்ந்த இரண்டு நம்பர்களிலிருந்து ஆபாச மெசேஜ் வந்துள்ளது. 17 வயதான அந்த மாணவி கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவருக்கு மெசெஜ் அனுப்பியது வேறு யாரும் இல்லை.


மாணவி பயின்ற பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஜெகதீசன் (36), தினகரன் (41) என்பவர்கள் தான். பள்ளியில் மாணவர்களின் விவர பட்டியலில் இருந்து மாணவியின் செல்போன் என்னை எடுத்து தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமாக மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு இரவு நேரங்களில் வீடியோ கால் செய்து தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனை வெளியே சொன்னால் பிரச்சனை வந்துவிடும் என்று பயந்த மாணவி இது தொடர்பாக யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆசிரியர்களின் அட்டூழியம் அதிகமானதால் நடந்த விஷயங்களை எல்லாம் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தினகரன் மற்றும் ஜெகதீசனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more: தினமும் நைட்டு லேட்டா தூங்குறீங்களா? அப்ப ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..!

English Summary

Pornographic messages all night.. Video calls.. Is this what teachers do..?

Next Post

பிறந்தது 2026..! உலகில் முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற தீவு நாடு..! எது தெரியுமா?

Wed Dec 31 , 2025
டிசம்பர் 31 அன்று நள்ளிரவு மணி 12 அடிக்கும்போது, புத்தாண்டு உலகம் முழுவதும் தனது பயணத்தை தொடங்குகிறது. பூமியின் சுழற்சி மற்றும் கால மண்டலங்கள் (Time Zones) காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் சுமார் 26 மணி நேரம் வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த நிலையில் உலகிலேயே முதல் நாடாக பசுபிக் தீவு நாடான கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது.. இந்த தீவு நாட்டில் 1,20,000 பேர் […]
happy new year 2026

You May Like