ஒருவர் பலி.. 15 பேர் கவலைக்கிடம்..! புத்தாண்டு தினத்தில் மீன் & பிரியாணியுடன் மது அருந்தியதால் நேர்ந்த சோகம்!

alcohol n 1

ஹைதராபாத் அருகேயுள்ள மெட்சல் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் துயரமாக மாறியது. அதிக அளவில் மது அருந்தியதன் காரணமாக 53 வயதான ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 15 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஜகத்கிரிகுட்டா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பவானி நகரில் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மீன் மற்றும் பிரியாணியுடன் மது அருந்தியது காரணமா?

ஜகத்கிரிகுட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி. வெங்கடேசம் இதுகுறித்து பேசிய போது “ புத்தாண்டை கொண்டாட பலர் ஒன்று கூடியிருந்தனர். அவர்கள் அதிக அளவில் மது அருந்திய பின்னர் மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சிலருக்கு திடீரென கடுமையான வாந்தி, மார்பில் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் அங்கு குழப்பம் நிலவியது.

உடனடியாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் சூராரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட 15 பேரும் தற்போது தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பாண்டு (53) என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.” என்று தெரிவித்தார்..

போலீஸ் விசாரணை தொடக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். உணவு விஷமடைந்ததாலா (பிரியாணி காரணமாக இருக்கலாம்) அல்லது போலி மதுவை அருந்தியதாலா இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

உயிரிழந்த பாண்டுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டை உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடிய நேரத்தில், இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : அசுத்தமான நீரால் 7 பேர் பலி, 149 பேர் மருத்துவமனையில் அனுமதி; இந்தூரில் என்ன தான் நடக்கிறது?

RUPA

Next Post

விஜய்க்கு அடுத்த சிக்கல்? திடீரென செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்.. உச்சக்கட்ட பரபரப்பு..

Thu Jan 1 , 2026
தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் தற்போது நிலவும் கட்சி தாவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நோக்கி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நகர்வுகளுக்கு பின்னணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் நீண்ட காலம் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெக-வில் […]
sengottaiyan

You May Like