விஜய்க்கு அடுத்த சிக்கல்? திடீரென செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்.. உச்சக்கட்ட பரபரப்பு..

sengottaiyan

தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் தற்போது நிலவும் கட்சி தாவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நோக்கி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நகர்வுகளுக்கு பின்னணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதிமுகவில் நீண்ட காலம் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, தனது பழைய ஆதரவாளர்களையும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களையும் புதிய கட்சிக்கு இழுக்கும் பணியில் வேகம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்தனர்.. மேலும் திருப்பூர், கோபிச்செட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்..

இந்த நிலையில் இன்று திருப்பூர் வெள்ளக்கோவிலில் தவெக நகர அலுவலகத்தை திறந்து வைக்க செங்கோட்டையன் வருகை தந்தார்.. அப்போது செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.. 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்தவர்களுக்கு பொறுப்பு தரவில்லை என்று குற்றம்சாட்டிய தவெகவினர் செங்கோட்டையனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

அதாவது வெள்ளக்கோவில் பகுதியில் உழைத்தவர்களுக்கு தவெகவில் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும், வெளியூரை சேர்ந்தவர்களுக்கு வெள்ளக்கோவில் பகுதியில் பொறுப்பு வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.. தவெக நிர்வாகிகள் குகன், மணி தலைமையிலான கட்சியினர் செங்கோட்டையனை முற்றுகையிட்டனர்..

இதையடுத்து அவலுலகத்திற்க் வாருங்கள் பேசலாம் என்று கூறி செங்கோட்டையன் தவெகவினரை சமாதானம் செய்து வைத்தார்.. எனினும் செங்கோட்டையனை தவெகவினர் தீடீரென முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. தொடர்ந்து செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி, தவெக நகர அலுவலகத்தை திறந்து வைத்தார்..

சமீபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா என்ற பெண் தனக்கு கட்சியில் பொறுப்பு வழங்காததால் தவெக கட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.. மேலும் அக்கட்சி தலைவர் விஜய்யின் காரை மறித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.. ஆனால் அப்போது காரை நிறுத்தாத விஜய் அஜிதா உள்ளிட்டோர் மீது லேசாக காரை மோதிய படி கண்டுகொள்ளாமல் சென்றார்.. விஜய்யை சந்திக்க முடியாத விரக்தியால் தற்கொலை முயற்சி மேற்கொண்ட அஜிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் விஜய்யை முதல்வராக்குவதே தனது இலக்கு என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.. இந்த பிரச்சனை முடிந்த நிலையில் தற்போது தவெகவினர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட சம்பவம் அக்கட்சியில் உள்ள உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது..

Read More : “திமுக ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சி.. கஞ்சாவை கூட டோர் டெலிவரி செய்றாங்க..” செல்லூர் ராஜு கலாய்..!

RUPA

Next Post

இனிமையான வார்த்தை பேசி மயக்கி.. நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டிய கும்பல்..! அதிர்ச்சி சம்பவம்..!

Thu Jan 1 , 2026
தெலங்கானா மாநிலம் ஜகியால் மாவட்டம் மெட்பள்ளியில் குறிப்பாகப் பணக்காரர்களை குறிவைத்துச் செயல்பட்ட ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பெண்களைத் தங்கள் வலையில் சிக்க வைத்து, அவர்கள் தனிமையில் இருக்கும்போது நிர்வாண வீடியோக்களைப் படம்பிடித்து, அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய்களைப் பறித்து வந்த கும்பலை மெட்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலை வழிநடத்தி வந்த ரவுடி ஷீட்டர் கோருட்லா ராஜு உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து […]
Honey Trap 768x432 1

You May Like